போராட்டகாரர்களை சுட்டு வீழ்த்துங்கள் ! பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உத்தரவு

Report

பிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், அங்கு போராட்டக்காரர்கள் கலவரம் செய்தால் அவர்களை சுட்டு விடுமாறு அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டூர்ட்டே ( Rodrigo Duterte உத்தரவிட்டுள்ளார்.

மெட்ரோ மணிலாவில் உணவு முறையாக விநியோகிக்கப்படவில்லை என இடதுசாரி குழுக்களின் உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தை தொடங்கியதையடுத்து, அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பிரச்சனை ஏற்பட்டு சண்டையிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டால் அவர்களை சுட்டுவிடுங்கள்’ என தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரொட்ரிகோ டூர்ட்டே தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகளில் ‘மேம்படுத்தப்பட்ட சமூக தனிமைப்படுத்துதல்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறதுடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பயண கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் நாய் கூண்டுகளில் அடைக்கப்படுவது அல்லது உச்சி வெய்யிலில் அமர நிர்பந்திக்கப்படுவது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவுகின்ற நிலையில் அது குறித்து மனித உரிமை அமைப்புகளை கவலை வெளியிட்டுள்ளன.

5349 total views