நாடு முழுவதும் இராணுவ வீரர்கள் குவிப்பு! தீவிரமாக போராடும் அவுஸ்திரேலியா

Report

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க, விக்டோரியா மாநிலத்தில் வைரஸ் பரவுவதை குறைக்க அவுஸ்திரேலியா அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.

அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் கொரோனா தனிமைப்படுத்தும் உத்தரவுகளை மீறுபவர்களுக்கு அதிகட்சடமாக 20,000 அவுஸ்திரேலியா டொலர் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கு அதிகமான இராணுவ வீரர்கள் குவிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் விக்டோரியா மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது, மேலும் மக்களின் அன்றாட செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது மற்றும் உள்ளூரில் பெரும்பலான கடைகளை மூட உத்தரவிட்டது.

ஆனால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் வீட்டில் தனிமைப்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் காரணமாக கடுமையான புதிய அபராதங்கள் தேவை என்று விக்டோரியா மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறுபவர்களுக்கு கிட்டத்தட்ட 5000 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்படும், மீண்டும் மீண்டும் மீறும் நபர்களுக்கு குற்றவாளிகளுக்கு 20,000 அவுஸ்திரேலியா டொலர் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்..

அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற விதிவிலக்கு அளிக்கப்படும் என்று ஆண்ட்ரூஸ் கூறினார்.

சுய தனிமைப்படுத்தும் உத்தரவுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதில் காவல்துறைக்கு உதவுவதற்காக கூடுதலாக 500 இராணுவ வீரர்கள் இந்த வாரம் விக்டோரியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஆண்ட்ரூஸ் கூறினார்.

5630 total views