இணையத்தில் நடத்தும் பாடம் புரியாததால் மாணவன் மோற்கொண்ட விபரீத முடிவு! சோகத்தில் குடும்பம்

Report

இந்தியாவில் இணையத்தளம் வாயிலாக கற்பிக்கும் பாடம் புரியவில்லையென மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் சென்னையை அடுத்த மேடவாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் 14 வயதுடைய கார்த்திக் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸால் கடந்த 6 மாத காலமாக உலக நாடுகள் அனைத்து பாரிய அச்சுறுத்தலில் உள்ளன. மேலும் கொரோனவால் மாணவர்களின் கல்வியும் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இதேவேளை இந்தியாவில் இணையத்தளம் வாயிலாக மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர் கார்த்திக், தனக்கு இணையத்தில் நடத்தப்படும் பாடம் எதுவும் புரியவில்லை. அதனால் தான் பள்ளி திறந்த பின்பு பள்ளியிலேயே சென்று படித்துக்கொள்கிறேன் என்று பெற்றோரிடம் கூறி வந்தாக தெரிகிறது.

நேற்று கார்த்திக்கை ஆன்லைனில் பாடம் படிக்க வைத்துவிட்டு அவரது பெற்றோர், ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டனர்.

மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தங்கள் மகன் கார்த்திக் வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

முதல்கட்ட விசாரணையில் நேற்று மதியம் இணையத்தில் தேர்வு நடந்ததாக தெரியவந்தது.

எனவே அதில் கார்த்திக் சரியாக தேர்வு எழுதாததால் மனமுடைந்தாரா? அல்லது இணைய வகுப்பில் ஆசிரியர் யாராவது கோபமாக பேசியதால் மனமுடைந்து தற்கொலை செய்தாரா.?.

உண்மையிலேயே இணையத்தில் நடத்தும் பாடம் சரியாக புரியாததால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் கார்த்திக் இணைய வகுப்புக்கு பயன்படுத்திய செல்போனையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

3638 total views