மூன்றாவது முறையாக நகர்த்தப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம்! எதற்காக தெரியுமா?

Report

விண் வெளி குப்பைகளுடன் மோதலைத் தவிர்க்க சர்வதேச விண்வெளி நிலையம் நகர்த்தப்பட்டது. இந்தாண்டில் நடந்த 3 வது நகர்த்தல் இதுவாகும்.

சர்வதேச விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே சுமார் 260 மைல்கள் (420 கிலோமீட்டர்), ஒரு மணி நேரத்திற்கு சுமார் 17,000 மைல் வேகத்தில் சுற்றுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் விண்வெளி வீரர்கள் நேற்று விண்வெளி குப்பையில் மோதாமல் இருக்க ஒரு முயற்சியை மேற்கொண்டனர். விண்வெளி ஆய்வி மையத்தை நகர்த்தினர் . தற்போது விண்வெளி ஆய்வு மையம்

பாதிக்படாது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா கூறி உள்ளது. இது பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள பொருட்களை சிறப்பாக நிர்வகிக்க வலியுறுத்தியது.

ரஷியா மற்றும் அமெரிக்க விமானக் கட்டுப்பாட்டாளர்கள் ஒன்றாக இணைந்து இரண்டரை நிமிடம் ஸ்டேஷனின் சுற்றுப்பாதையை சரிசெய்து மேலும் விலகிச் சென்று மோதலைத் தவிர்த்தனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுமார் 1.4 கிலோமீட்டர் (கிட்டத்தட்ட ஒரு மைல்) தொலைவில் இந்த குப்பைகள் கடந்து சென்றதாக நாசா தெரிவித்துள்ளது.

அச்சுறுத்திய அந்த விண்வெளி குப்பை உண்மையில் 2018 ஜப்பானிய ராக்கெட்டின் ஒரு பகுதி என்று வானியலாளர் ஜொனாதன் மெக்டொவல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ராக்கெட் கடந்த ஆண்டு 77 வெவ்வேறு துண்டுகளாக உடைந்தது.

இந்த விண்வெளி குப்பை மோதி இருந்தால் சோலார் பேனல் அல்லது நிலையத்தின் பிற அம்சங்களை கடுமையாக சேதப்படுத்தும்.

இந்த வகை நகர்த்தல்கள் ஒரு வழக்கமான அடிப்படையில் அவசியம். இதுபோன்ற 25 நகர்த்தல்கள் 1999 முதல் 2018 வரை நடந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இது மூன்றாவது நகர்த்தல் இது என்று நாசா தெரிவித்து உள்ளது.

கடந்த அறுபது ஆண்டுகளில் பூமியின் சுற்றுப்பாதையில்சுழலும் செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் மற்றும் விண்வெளியில் செலுத்தப்பட்ட பிற பொருட்கள் வெடித்து சிதறி விண்வெளியில் குப்பைகள் அதிகமாகி உள்ளன.இதனால் இந்த நடவடிக்கைகள் இன்னும் அடிக்கடி நிகழக்கூடும்.

1557 total views