கொரோனாவால் இறந்தவர் உடல் 2 மாதத்துக்கு பின் தோண்டியெடுப்பு: தமிழகத்தில் பரபரப்பு

Report

பட்டுக்கோட்டையில் கொரோனாவால் இறந்தவரின் உடலில் பாகங்கள் திருடப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்த புகாரின்பேரில் அவரது உடல் இன்று தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நேரு நகர் பள்ளிவாசல் ெதருவை சேர்ந்தவர் சலீம்(42). நகை கடை உரிமையாளர். இவர் கடந்த ஜூலை 20ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து 23ம் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜூலை 29ம் தேதி காலை சலீம் இறந்தார். இதையடுத்து அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி சலீம் உடல் வடசேரி ரோடு பெரிய பள்ளிவாசல் பின்புறம் அடக்கம் செ்யயப்பட்டது.

இந்நிலையில் அவரது மனைவி ஷர்மிளா மற்றும் உறவினர்கள், தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை என்ற பெயரில் அலட்சியமாக சிகிச்சை அளித்ததால் கணவர் இறந்தார்.

கணவர் சாவில் சந்தேகம் உள்ளது. காலையில் இறந்தவரை மாலையில் தெரிவித்ததால், சலீம் உடல் உறுப்புகள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

எனவே அவரது உடலை தோண்டி எடுத்து பரிசோதிக்க வேண்டும் என கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் இன்று பட்டுக்கோட்டை தாசில்தார் தரணிகா தலைமையில், டிஎஸ்பிக்கள் புகழேந்தி, பாரதிதாசன் ஆகியோர் முன்னிலையில் டாக்டர்கள் சீனிவாசன், சரவணன், பாலமுருகன் குழுவினர், நகராட்சி தூய்மை பணியாளர்கள கொண்டு பொக்லைன் மூலம் சலீம் உடலை ேதாண்டி பிரேத பரிசோதனை செய்தனர்.

3204 total views