கொரோனா நோயாளிகளை கண்டறிய மோப்ப நாய்களை களமிறக்கும் பின்லாந்து

Report

கொரோனா நோயாளிகளை கண்டறிய மோப்ப நாய்களை களமிறக்கும் முயற்சியை பின்லாந்து அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

தலைநகர் ஹெல்சின்கியில் உள்ள விமான நிலையத்தில் இந்த கொவிட்-19 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான முதற்கட்ட சோதனையில், தாங்களாக முன்வரும் விமானப் பயணிகளின் கழுத்துப் பகுதியில் உள்ள வியர்வை, துணியால் ஒத்தி எடுக்கப்பட்டு, நாய்களுக்கு வழங்கப்படுகிறது.

அவற்றை நுகர்ந்த பின் நாய்கள் சந்தேகம் எழுப்பினால், அந்தப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதேவேளை பின்லாந்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 9,379பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , 343பேர் உயிரிழந்துள்ளனர்.

1128 total views