சீனா தொழிநுட்ப நிறுவன கட்டிடத்தில் தீ பரவல்

Report

சீனாவில் அமைந்துள்ள ஹுவாவி தொழிநுட்ப நிறுவன கட்டிடத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தெற்கு நகரமான டோங்குவானில் உள்ள தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவி டெக்னாலஜிஸ் [HWT.UL] நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தொகுதியிலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தீ பரவல் இடம்பெறும் போது அக் கட்டிடம் மூடப்பட்டு திருத்தற்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் தீ பரவியமைக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

1200 total views