அமோக விற்பனையில் கிறிஸ்துமஸ் தாத்தா சாக்லெட்கள்!

Report

ஹங்கேரியில், முகக்கவசம் அணிந்த கிறிஸ்துமஸ் தாத்தா சாக்லெட்கள், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சாக்லெட் தயாரிப்பாளரான லஸ்லோ ரிமோக்சியின் (Laszlo Rimoczi) வியாபாரம், கொரோனா ஊரடங்கால், பல மாதங்களுக்கு பாதிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்க தயாரான அவர், கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தான் வழக்கமாக தயாரிக்கும் சாண்டா கிளாஸ் சாக்லெட்களுக்கு, பாதாம் கிரீமால் முகக்கவசம் அமைத்துள்ளார்.

ஆரம்பத்தில் இது தொடர்பில் சிலர் முகம் சுழித்தாலும், பின்னர் ஆர்டர்கள் குவியத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் , தற்போது அவர் தினந்தோறும் 100 சாண்டா கிளாஸ் சாக்லெட்களை தயாரித்து வருகிறார்.

766 total views