மருந்தை வழங்க தயார்; ரஷ்யா அறிவிப்பு

Report

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தான Sputnik V யை பிற நாடுகளுக்கு வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)தெரிவித்துள்ளார்.

ஜி-20 மாநாட்டில் காணொலி காட்சி மூலமாக உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”கொரோனாவுக்கு 2ஆவது மற்றும் 3ஆவது தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறன. மேலும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி portfolioவை உருவாக்குவதே தங்களின் பொதுவான குறிக்கோள் என கூறினார்.

இதேவேளை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தான Sputnik V, 92% குணப்படுத்தும் வகையில் இருப்பதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2820 total views