பிரான்ஸ் நாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரஜைகளை நாடு கடத்திய சிங்கப்பூர்!

Report
250Shares

பிரான்ஸ் நாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பங்களாதேக்ஷ் பிரஜைகள் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.

பிரான்சில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் போது பிரெஞ்சு அரசுக்கும் நாட்டுக்கும் எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புக் கோஷங்களைப் பதிவு செய்தார்கள் என்ற காரணத்தினால் 15 பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்களை இவ்வாறு சிங்கப்பூர் அரசு, நாடு கடத்தியிருப்பதாக அறிவித்துள்ளது .

உள்துறை அமைச்சு வெளியிட்ட தகவலின்படி இஸ்லாமிய இறைதூதரின் கேலிச்சித்திர படங்களை வெளியிட்ட பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகை தொடர்பாக அவர்கள் வன்மையான தகவல்களை வெளியிட்டு இருந்ததை அவதானித்த சிங்கப்பூர் உளவுத்துறை அவர்களை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.

சிங்கப்பூரில் வேலை ரீதியாக வந்ததாகவும் அதிகமானவர்கள் கட்டிட வேலைகளில் ஈடுபட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சிங்கப்பூர் அரசாங்கம் இவர்கள் எப்படியான தகவல்களை வெளியிட்டார்கள் என்பதை அறிவிக்கவில்லை.

ஆனால் பிரெஞ்சு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எதிரான கோஷங்களை இவர்கள் வெளியிட்டதாக மாத்திரம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் – Emmanuel Macron கேலிச்சித்திர படங்களை ஆதரித்து தமது கருத்தை வெளியிட்ட சமயத்தில் இஸ்லாமிய நாடுகளில் எதிர்ப்புகள் கிளம்பின.

இதன்போது பங்களாதேஷிலும் ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை பிரெஞ்சு அரசுக்கு எதிராக நடத்தியிருந்தனர்.

சிங்கப்பூர் அதிகமான சீன மக்களைக் கொண்ட நாடு இங்கு சிறிதளவான இஸ்லாமியர்கள் வாழ்கின்றார்கள். அத்துடன் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

10096 total views