கொத்துக் கொத்தாக வீதியில் பணத்தை வீசிச் சென்ற கொள்ளையர்கள்; எங்கு தெரியுமா?

Report
403Shares

பிரேஸிலில் வங்கிகளில் கொள்ளையடித்த பணத்தை கொள்ளையர்கள் வீதிகளில் பணத்தை வீசிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

பிரேஸிலில் சான்டா கேட்டரினா என்ற இடத்திலுள்ள 4 வங்கிகளில் 20க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் புகுந்தனர்.

அதன்பின்னர் அங்கிருந்தவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்து வங்கியிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அப்போது நடந்த மோதலில் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகின்றது.

இந் நிலையில் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் வீதிகளில் வீசிச் சென்றதாகவும் இதனைக் கண்ட மக்கள் கொத்துக் கொத்தாக பணத்தை அள்ளிச் சென்றுள்ளதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

16268 total views