கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்திய வீரருக்கு அபராதம்!

Report
145Shares

கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜெர்சியை மாற்றிய அர்ஜென்டினா வீரர் லயனல் மெசிக்கு ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு அபராதம் விதித்துள்ளது.

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா சமீபத்தில் காலமானார். இந்த நிலையில் அவருக்கு லயனல் மெசி வித்தியாசமான முறையில் மரியாதை செய்தார்.

ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா போட்டியில் லீக் தொடரில் ஒசாசுனா அணியுடன் பார்சிலோனா மோதியது.

அப்போது போட்டி தொடங்கும் முன் இரு அணி வீரர்களும் மாரடோனாவுக்கு மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாதியில் 73ஆவது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோல் அடித்தார்.

அப்போது தனது பார்சிலோனா அணி ஜெர்சியை கழட்டினார் மெஸ்சி. உள்ளே மாரடோனா கடைசியாக விளையாடிய நியூவெல் ஓல்டு பாய்ஸ் அணியில் அவர் அணிந்திருந்த 10ஆம் எண் ஜெர்சியை மெஸ்சி அணிந்திருந்தார்.

அதைத் தொட்டு முத்தமிட்டு வானத்தை நோக்கி மாரடோனாவுக்கு மரியாதை செலுத்தினார் மெஸ்சி.

இந்த போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் விதியை மீறியதாக மெஸ்சிக்கு ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு 53 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

5347 total views