
ரோஹிங்யாவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தங்கி வாழும் பங்களாதேஷின் நயபரா அகதிமுகாமில் இன்று அதிகாலை 1 மணியளவில் திடீர் என தீ பரவியது.
இதன் காரணமாக பள்ளிவாசல், மத்ரஸா, சந்தை உள்ளிட்ட அகதிமுகாம் முழுவதும் எரிந்து சாம்பலாகியுள்ளது.
அகதிகளின் உடமைகள் அனைத்தும் அழிந்து விட்ட நிலையில் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இதேவேளை பர்மாவிலிருந்து வெளியேற்றப்பட்ட லட்ச கணக்கான முஸ்லிம்களுக்கு பங்களாதேஷ் மாத்திரமே அடைக்கலம் கொடுத்து உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.