இத்தாலியின் 20 மண்டலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை

Report
0Shares

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு இத்தாலியின் 20 மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்து வரும் மார்ச் 27ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டின் பிரதமராக கடந்த 13 ஆம் திகதியில் இருந்து மரியோ திராகி பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் அந்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு நாட்டின் 20 மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு வருகிற மார்ச் 27ம் தேதி வரை தடையை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திப்பதற்கான கட்டுப்பாடுகளையும் இத்தாலிய அரசாங்கம் நீட்டித்துள்ளது.

இதன்படி, ஒரு நபரின் வீட்டுக்கு 2 பேருக்கு கூடுதலானோர் செல்ல முடியாது. அப்படி செல்வோரும் ஒரு நாளுக்கு மேல் தங்க முடியாது. சிவப்பு மண்டலங்களில் இருப்போர் வேறு ஒருவரை சந்திக்க செல்வதற்கே அனுமதி இல்லை.

எனினும், பணி, சுகாதாரம் அல்லது அவசர காரணங்களுக்காக பயணம் செய்வதற்கு அல்லது ஒருவர் தனது வீட்டுக்கு திரும்ப வேண்டிய அவசியத்தில் உள்ளவர் ஆகியோருக்கு இந்த மண்டல போக்குவரத்து தடையானது பொருந்தாது என தெரிவித்துள்ளது.

இதேவேளை இத்தாலி நாட்டிற்குள்ளேயே சுற்றுலா செய்வதற்கான தடையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

201 total views