இன்று நள்ளிரவு எதுவும் நடக்கலாம்? மிகவும் பரபரப்பாகியுள்ள கொழும்பு அரசியல்

Report

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை அடுத்து கொழும்பு அரசியல் பெரும் பரபரப்பை அடைந்துள்ளது.

இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா சற்று முன்னர் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இன்று நள்ளிரவு நாடாளுமன்றை கலைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதனை அரசாங்க தகவல் திணைக்களம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2589 total views