வெளியானது கடவுளின் புகைப்படம்! உருவம் கொடுத்த விஞ்ஞானிகள்

Report
709Shares

கடவுள் இப்படிதான் இருப்பார் என வட கரோலினா விஞ்ஞானிகள் ஒரு உருவத்தை உருவாக்கியுள்ளனர்.

சேப்பல் ஹில்லில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் உளவியலாளர்கள் குழு 511 அமெரிக்க கிறிஸ்தவர்களின் உதவியுடன் இந்த கடவுளின் ஓவியத்தை உருவாக்கியது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் நூற்றுக்கணக்கான தோற்றமளிக்கும் முகம்-ஜோடியைப் பார்த்து, ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் முகத்தைத் தேர்வு செய்தனர்.

தேர்ந்தெடுத்த முகங்களை இணைப்பதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் கடவுள் எவ்வாறு இருக்க வேண்டும் என நினைத்தார்களோ அதை பிரதிபலிக்கும் ஒரு முகத்தை உருவாக்கினர். அவர்களின் முடிவு ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது.

அதாவது வெள்ளைத் தோலுடன் இளமையாக சுத்தமாக ஷேவ் செய்து 80களில் உள்ள பையனை போன்று உள்ளது கடவுளின் உருவம். இந்த கடவுளின் எக்ஸ்பிரஷன் மோனலிசாவின் சிரிக்கும் ஓவியத்தை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

லிபரல்ஸ் கடவுள் பெண்மை நிறைந்தவராகவும் இளமையானவராகவும், அன்பு மிகுந்தவராகவும் இருப்பார் என கற்பனை செய்திருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.மேலும் இந்த ஆய்வுப் புள்ளிவிவரங்களின் படி ஒவ்வொரு நாட்டு மக்களும் எப்படி கடவுளை கற்பனை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

அதாவது கவுகேஸியன்ஸ் வெள்ளைநிறத்தில் கடவுளை கற்பனை செய்துள்ளனர். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கருப்பு நிற கடவுளை கற்பனை செய்துள்ளனர். இளையவர்கள் ஒரு இளம் கடவுளை கற்பனை செய்துள்ளார்கள்.

19241 total views