பூனைக்கு அமைக்கப்பட உள்ள வெண்கல சிலை !

Report
9Shares

ஃபெலிசெட்டி (Felicette) என்ற பூனையானது கடந்த 1963-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் திகதி வெரோனிக் ஏ.ஜி.1(Véronique AG1) என்ற ஏவுகணை மூலம், விண்வெளிக்கு அனுப்பி வைக்கபட்டது.

பூமியில் இருந்து 157 கி.மீட்டர் உயரத்துக்கு சென்ற பூனைக்கு, சுருக்கமாக எடை இழப்பு ஏற்பட்டது.

அந்த ஏவுகணை ஆறு மடங்கு வேகத்தை எட்டியதோடு 9.5 கிராம் சக்தியை வெளிப்படுத்தியது. 15 நிமிடத்துக்கு பிறகு, ஃபெலிசெட்டி, பத்திரமாக பரசூட் மூலம் உயிருடன் தரைக்கு இறங்கியது.

இதன் மூலம் முதன் முறையாக விண்வெளிக்கு சென்ற பூனை என்ற பெருமையை ஃபெலிசெட்டி என்ற பூனை பெற்றது.

இந்த பூனைக்கு பிரான்சில் வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை லண்டனைச் சேர்ந்த மாத்யூ செர்ஜ் செய்து வருகிறார்.

960 total views