மிக அதிக எண்ணிக்கையிலான உபகிரகங்களை கொண்ட பெருமையை சுவீகரித்துள்ள சனிக் கிரகம்

Report

சனிக் கிரகத்தின் புதிய 20 உப கிரகங்களை அமெரிக்காவின் நாசா ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது.

இந்த நிலையில் அவற்றையும் சேர்த்து, சனிக் கிரகத்தை மொத்தமாக 82 உப கிரகங்கள் சுற்றிவருகின்றன.

சூரியக் குடும்பத்தின் கோள்களிடையே மிக அதிக எண்ணிக்கையிலான உபகிரகங்களை கொண்ட பெருமையை வியாழன் கிரகமே இதுவரை பெற்றிருந்த நிலையில், அந்த பெருமையை சனிக்கிரகம் தற்போது தனதாக்கிக்கொண்டுள்ளது.

வியாழன் கிரகத்திற்கு மொத்தமாக 79 உபகிரகங்கள் இருப்பதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அந்தவகையில் கடந்த 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து மிக அதிக உப கிரகங்களை கொண்ட கோள் என்ற பெருமையை வியாழன் கொண்டிருந்தது.

இந்த நிலையில் சனியின் புதிய உப கிரகங்கள் ஹவாய் தீவிலிருக்கும் சுபாரு தொலைநோக்கி மூலம் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒவ்வொரு புதிய உபகிரகமும் சுமார் 5 கிலோமீட்டர் விட்டத்தைக் கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவற்றுக்குப் பெயரிடும் நோக்கில் போட்டி ஒன்றும் நாசாவினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1030 total views