கனேடிய பொலிஸாரினால் தேடப்படும் இலங்கையர்!

Report

கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றை நேற்று சுற்றி வளைத்த சுகாதார அதிகாரிகள், தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் அங்கு காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சோதனை நடவடிக்கை காணொளியாக பதிவு செய்யப்பட்டது. இதன்போது கனடா பொலிஸாரினால் தேடப்படும் குற்றவாளி ஒருவர் சிக்கியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

2015ம் ஆண்டு முதல் கனடா பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் Anton Andrew என்பவரே காணொளி மூலம் சிக்கியுள்ளார்.

குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் குழந்தைகளை வைத்து ஆபாச படம் உருவாக்கியமை போன்ற பல பாலியல் ரீதியிலான குற்றங்களுடன் தொடர்புபட்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக ஒட்டாவா பொலிஸார் இவரை தேடி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் கொழும்பு ஹோட்டலில் சிக்கியுள்ளார்.

Anton Andrew என்பவர் சுற்றிவளைக்கப்பட்ட ஹோட்டலின் முகாமையாளராக பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

11154 total views