தங்கம் விலை குறைந்தது...மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

Report

இன்றைய நாளின் துவகித்திலேயே தங்கம் விலை சவரனுக்கு ரூ.1832 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.40,104க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராமுக்கு ரூ.229 குறைந்து, ரூ.5013க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4ம் நாளாக தங்கம் விலையில் சரிவு காணப்பட்டுள்ளது. மேலும், இன்று நாளின் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையில் 1,000 ரூபாய் சரிந்தது இதுவே முதல் முறையாகும்.

ஏனெனில் கடந்த வாரத்தில் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டிய நிலையில் அதிரடியாக விலை குறைந்தது வாடிக்கையாளர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,616க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறையாமல் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது.

கடந்த 1ம் தேதி தங்கம் ஒரு சவரன் 41,568க்கும், 3ம் தேதி 41,592, 4ம் தேதி 41,616, 5ம் தேதி 42,592க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 18வது நாளாக கடந்த 7-ம் தேதி ரூ.46 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5420க்கும், சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,360க்கும் விற்கப்பட்டது.

இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தங்கத்தின் விலை குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

51043 total views