வேட்டையாடச் சென்றவரை குத்திக் கொன்ற எருமை

Report
30Shares

எருமை ஒன்று குத்தி நபர் ஒருவர் பலியான சம்பவம் யால காட்டில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் வணிகசேகர முதியென்சலாகே தர்மபால என்ற ஐம்பத்தைந்து வயது நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தர்மபால நேற்று முன்தினம் யால வனத்தின் இரண்டாம் இலக்கப் பகுதிக்குச் சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரைத் துரத்தி வந்த எருமை அவரைக் குத்தித் தூக்கி வீசியுள்ளது.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தர்மபால சுற்றுலாவாசி அல்ல என்றும், வேட்டையாடும் நோக்கத்துடனேயே காட்டுக்குச் சென்றிருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

1655 total views