சிரியா வான்படை தாக்குதலில் 61 பொது மக்கள் பலி

Report
25Shares

சிரியாவின் அலப்போ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வான்படை தாக்குதலில் 61 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு சிரிய மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்த வான்வழி தாக்குதலை சிரிய அரச படையா? அல்லது ரஷ்ய படையா? மேற்கொண்டது என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதற்கான தரவுகள் திரடப்படுவதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சமாதான வலயம் ஒன்றை ஸ்தாபிக்க ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்தநிலையில் குறித்த வான்வழி தாக்குதலை அடுத்து அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளனன.

1594 total views