'முட்டை அப்பம்' துரோகத்துக்கு 'இடியப்பம்' மூலம் பதிலடி கொடுத்த மகிந்த!!

Report
36Shares

கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை அரசியல் களத்தில் 'முட்டை அப்பம்' என்பது பேச்சு பொருளாக மாறியது.

பிரதான அரசியல் மேடைகளில் கூட , ஏன் சர்வதேச ஊடகங்களில் கூட இந்த முட்டை அப்ப விவகாரம் முக்கிய இடத்தை பிடத்தது,

மகிந்தவின் அமைச்சரவையில் இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி இரவு அலரி மாளிகையில் மகிந்தவுடன் ஒன்றாக அமர்ந்து 'முட்டை அப்பம் ' சாப்பிட்டு விட்டே மறுநாள்

காலையில் பொது வேட்பாளராக களமிறகும் அறிவிப்பை வௌியிட்டிருந்தார்.

அட " நேற்று இரவு தானே ஒன்றாக அப்பம் சாப்பிட்டோம் அதற்குள் திடீரென இப்படி செய்து விட்டாரே என மகிந்த ஆதங்கம் வௌியிட்டிருந்தார்.அதன்பின்னரே 'முட்டை அப்பம்' கதை பிரபலமானது.

அமெரிக்காவின் இராஜாங்க தந்திரியாக இருந்த நிஷா பிஷ்வால் இலங்கை வந்திருந்த போது , வௌிவிவகார அமைச்சில் அவருக்கு 'முட்டை அப்பம்' வழங்கப்பட்டது.

அது கலைவையான உணவு என அவர் டுவிட் செய்திருந்தார்.இதையடுத்து இந்த விடயம் சூப்பர் ஹிட்டானது.

நடைபெற்று முடுவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மகிந்த அணி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.இது தொடர்பில் அறிவிப்பு விடுக்க கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ , ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கிண்டல் செய்யும் வகையில் கருத்து வௌியிட்டிருந்தார்.

அரசை 'இடியப்பம்' சாப்பிட்டு விட்டோ அல்லது வேறு எதையாவது சாப்பிட்டு விட்டோ சூழ்ச்சி மூலம் கவிழ்க்க மாட்டேன் என்பதே மகிந்த வின் கருத்தாகும்.

அதாவது , அன்று 'முட்டை அப்பம்' சாப்பிட்டு விட்டு பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரி தனக்கு துரோகமிழைத்தார் என அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

2158 total views