வெடிக்கும் புதிய சர்ச்சை! - தமிழர்களின் எதிர்காலம் என்னவாகும்?

Report
74Shares

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான அரசியல் மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நேற்று தனது உத்தியோக பூர்வ இல்லத்தில் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தின்போது குறித்த விடயம் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது, அவ்வாறு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இணைந்த புதிய அரசாங்கம் அமைக்கப்படுமாயின் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல்வேறு அழுத்தங்களைக் கொடுக்கும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதேபோன்று அவ்வாறான அரசியல் நகர்வுகள் ஏற்படும் பட்சத்தில் புதிய அரசியல் அமைப்பினை நிறுத்த வேண்டிய, அல்லது மீளப்பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தள்ளப்படும் எனவும் ஜனாதிபதி குறித்த ஆலோசனைக் கூட்டத்தின்போது எச்சரித்துள்ளதாக சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், புதிய அரசியல் அமைப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிலைப்பாட்டினை நீக்கிக்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாவும் குறித்த அமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

3033 total views