இந்தியா இலங்கைக்கு இடையேயான உறவில் விரிசல்?

Report
52Shares

சீனாவுடனான நட்பினால் இந்திய இலங்கை ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இன்றைய தினம் அந்த நாட்டின் செய்தியாளர் மத்தியில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக தமிழ் மக்களுக்கான தேவைகளை உரிய முறையில் நிறைவேற்ற முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இந்தியா உட்பட வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கை ஏதிலிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

1606 total views