இலங்கை இராணுவத்திற்கு உள்ள கோரிக்கை நாளாந்தம் அதிகரிப்பு

Report
13Shares

சர்வதேச சமாதான நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்திற்கு உள்ள கோரிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.உலகில் பாரிய மனிதாபிமான பணிகளை மேற்கொண்ட இராணுவம் என்ற ரீதியில் இலங்கை இராணுவத்திற்கு உள்ள அனுபவமே இதற்குக் காரணமாகும். இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் பணிகள் தொடர்பான செயற்பாடுகளுக்கான புதிய பணிப்பாளர் சபை அமைக்கப்பட்டுள்ளது.

ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கி செயற்படும் அதிகாரிகளைத் தெரிவு செய்து, சர்வதேச சமாதானப் பணிகளில் ஈடுபடுத்துவதே இதன் நோக்கமாகும். தற்போது இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த 40 அதிகாரிகளும் 374 வீரர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் பணிகளில் ஈடுபட்டுள்னர்.

கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி மாலி நாட்டில் ஏற்பட்ட சம்பவத்தின் போது, இலங்கை இராணுவம் மேற்கொண்ட பணியை அனைத்து நாடுகளும் கண்டறிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

675 total views