ஈழ அகதிகளை கனடாவிற்கு ஏற்றி சென்ற எம்.வீ.சன்சீ அழியப்போகின்றதா ?

Report
78Shares

ஈழ அகதிகளை கனடாவிற்கு ஏற்றி சென்ற எம்.வீ.சன்சீ என்ற கப்பலை அழிப்பது குறித்து கனடா அரசாங்கம் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 492 ஈழ அகதிகளுடன் குறித்த கப்பல் கனடாவை சென்றடைந்தது. இந்த கப்பல் ஊடாக ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்து இமானுவேல் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவருக்கு எதிரான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குறித்த கப்பல் கனடா, பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த கப்பலில் மிருகங்கள் வசிப்பதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த கப்பலை என்ன செய்வது என்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

3243 total views