நல்லாட்சி கின்னஸில் இடம்பிடிக்கும்: ரோஹித அபேகுணவர்தன...

Report
7Shares

இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் தோல்வியுற்ற தலைவரை கொண்ட அரசாங்கமாக நல்லாட்சி கின்னஸில் இடம்பிடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மாறி மாறி வெளிநாட்டுக்கான விஜயங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் சர்வதேச நாடுகளுடன் பத்து பொருளாதார உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாகவும், பல நிவாரணங்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதியும், பிரதமரும் மார் தட்டிக் கொள்கின்றனர்.

அவர்கள் கூறுவது போன்று நமது நாட்டிற்கு போதிய நிவாரணங்கள் கிடைத்திருப்பின், எரிபொருள், தேங்காய் போன்றவற்றின் விலை இவ்வாறு அதிகரித்திருக்குமா?, நாடு இவ்வாறனதொரு ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளப்படுமா?.

இவர்கள் வாயளவில் கூறும் சர்வதேச நாடுகளுடனான உடன்படிக்கை குறித்து கூறும்போது, எமது நாடு சிங்கப்பூராக மாறிவிடும் என்ற எண்ணம் எமக்குள் தோன்றுகிறது. ஆனால், அதன் வெளிப்பாட்டில் எமக்கு கண்கூடாக எதனையும் கண்டுக் கொள்ள முடியவில்லை.

இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் தோல்வியுற்ற தலைவரை கொண்ட தோல்வியுற்ற அரசாங்கமொன்று காணப்படின், அது நல்லாட்சியே. இந்த விடயத்தில் நல்லாட்சி கின்னஸ் சாதனை படைக்கும்.

நல்லாட்சி இன்னும் சில காலங்களுக்கு நீடிக்கவுள்ள நிலையில், அக்காலப்பகுதிக்குள் கின்னஸ் சாதனை பட்டியலுக்குள் இடம்பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் நல்லாட்சி உறுதிபடுத்தும்” எனத் தெரிவித்தார்.

970 total views