ஸ்பெயின் அரசரின் உறவினருக்கு 5 ஆண்டு சிறை

Report
9Shares

ஸ்பெயின் நாட்டின் அரசக் குடும்ப வாரிசாக இருப்பவர் அரசர் பெலிப். இவரது மனைவி அரசி லெடிசியா. லெடிசியாவின் சகோதரர் இனாக்கி உர்டான்கரின். இவர், டியாகோ டாரஸ் என்பவருடன் இணைந்து நூஸ் இன்ஸ்டிடியூட்டை நடத்தி வந்தார். ஆனால் அந்த இன்ஸ்டிடியூட்டுக்கு வந்த நிதியை தவறாகப் பயன்படுத்தினார் என்று இனாக்கி மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஸ்பெயின் நீதிமன்றம் இனாக்கி உர்டான்கரினுக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனையை கடந்த பிப்ரவரி மாதம் வழங்கியது.

இதை எதிர்த்து இனாக்கி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 6 ஆண்டு சிறை தண்டனையை 5 ஆண்டு 10 மாதமாகக் குறைத்துள்ளது.

359 total views