விடுதலைபுலிகள் பற்றிய பேச்சால் அமைச்சரவையில் களேபரம்

Report
45Shares

விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது உயிரிழந்த விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்கும் யோசனைக்கு அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்குதல் தொடர்பான யோசனை ஒன்று அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த யோசனைக்கு அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பலர் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதோடு, பல படுகொலைகளை மேற்கொண்ட புலிகளின் குடும்பத்தாருக்கு நட்ட ஈடு வழங்கவேண்டுமா என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்கும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சரவையின் அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் சுவாமிநாதன் குறித்த நட்டஈடு தொடர்பான யோசனையை முன்மொழிந்து, நேற்று இது தொடர்பான அனுமதி கோரலினை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1723 total views