கனடாவிடம் மன்னிப்பு கோரிய வெள்ளை மாளிகை

Report
252Shares

அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டே நவரோ, கனடா தலைமை அமைச்சர் தொடர்பில் வெளியிட்ட விமர்சனங்களுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

பீட்டெ நவரோ, அண்மையில் கனடா தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிராக நடந்துகொள்ளும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, ‘நரகத்தில் சிறப்பு இடம் கிடைக்கும் என்று நவரோ கூறியிருந்தார்.

உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா வரி விதித்துள்ளதால், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த மாதம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கனடா தலைமை அமைச்சர் தெரிவித்தமைக்கே நவரோ இவ்வாறு விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.இந்த நிலையிலேயே அவர் இது தொடர்பில் மன்னிப்பைக் கோரியுள்ளார்.

இதேவேளை, நவரோவின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா என ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்து விட்டார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

7695 total views