வடகொரிய அதிபரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கேட்டால் அதிர்ந்து போய்விடுவீர்கள்

Report
104Shares

உலக நாடுகளை தன்னுடைய அணு ஆயுத சோதனை மூலம் மிரட்டி வந்த வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் திடீரென்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், தங்கள் நாட்டில் இருக்கும் அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விடுவதாகவும் தெரிவித்தார்.

கிம்மின் இந்த திடீர் மனமாற்றத்தால் உலக நாடுகள் பெரும் வியப்பில் இருந்தன. இதைத் தொடர்ந்து இன்று சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் சந்தித்து பேசிக் கொண்டனர்.

இவர்களின் இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சொத்து மதிப்பும், அவருக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்பது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

கிம் ஜாங் உன் கடந்த 1984-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் திகதி பிறந்தார். 34 வயதான கிம் கடந்த 2011-ஆம் ஆண்டு வடகொரியாவின் ஜனாதிபதியானார்.

இதுவரை 84-க்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டுள்ள கிம் ஜாங்கின் வாழ்க்கை பற்றிய தகவல்கள் இன்றளவும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் The Squander என்ற இணையதளம் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த தகவல்கள் மற்றும் கிம் பற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரின் சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளது.

3476 total views