டென்னிஸ் பந்துக்குள் ஹெரோயின் : பெண்ணுக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

Report
13Shares

டென்னிஸ் பந்து ஒன்றுக்குள் ஹெரோயின் 3.15 கிராமை வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு வீசிய குற்றத்துக்காக பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஷம்பா ஜானகி ராஜரத்ன ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

பொரள்ள, சீவலி மாவத்தையை சேர்ந்த ஹிருனி அல்விஸ் எனும் 33 வயதுடைய பெண் ஒருவருக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு டென்னிஸ் பந்துக்குள் ஹெரோயின் 3.15 கிராமை வைத்து வீசியதற்காக சட்டமா அதிபரினால் பெண் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

999 total views