தொழுதுவிட்டு வெடித்து சிதறிய இளம்பெண் (வீடியோ இணைப்பு)

Report

ரஷ்யாவின் இளம்பெண் ஒருவர் மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறும் முன், 21 முறை “அல்லா என்னை மன்னித்துவிடு” என எழுதி வைத்துவிட்டு வெடித்துச் சிதறிய சம்பவம் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றின் அருகே, ஹிஜாப் அணிந்த ஒரு பெண், பொலிஸாரின் எச்சரிக்கையையும் மீறி தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

கரினா ஸ்பிரிடோனோவா என்னும் 25 வயதான அந்த பெண் கருப்பு நிற உடையும், தலையில் ஹிஜாபும் அணிந்து க்ரோஸ்னி பகுதியில் ஆயுதம் ஏந்திய பொலிஸாரை நோக்கி சென்றதைக் கண்டு அவரது சந்தேகத்திற்குரிய நடவடிக்கையினால் பொலிஸார் நின்று அவரது அடையாள அட்டையைக் காட்டும்படி அவளிடம் தெரிவித்தனர்.

அந்த பெண்ணோ நிற்காமல், பொலிஸாரை நோக்கி முன்னேறுவதைக் கண்ட பொலிஸார் சுதாரித்துக் கொண்டு, எச்சரிக்கும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுகின்றனர்.

அதற்கு அஞ்சாத அந்த பெண் தன் உடலில் கட்டியிருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்தார். உடல் சிதறி அதே இடத்தில் அந்த பெண் உயிரிழந்த நிலையில் பொலிஸாருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

குறித்த பெண் கவர்ச்சியாக உடையணிந்து, களியாட்ட நிகழ்வுகளுக்கு செல்லும் பழக்கம் கொண்டவரான அவர், பின்னர், தீவிர மதப்பற்றுடையவரானார் என்று தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில், அவர் ஐ.எஸ் அமைப்பால் மூளைச் சலவை செய்யப்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.

21106 total views