சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது

Report

சிரியா நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அவர்களை ஒடுக்க அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 2000 வீரர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த கூட்டுப்படையினர் அங்கு தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் அதிகளவில் இறந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நாட்டில் உள்ள படைகள் விரைவில் வாபஸ் பெறப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையின் சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் கொலேனல் சீன் ரியான் நேற்று பெய்ரூட்டில் அளித்த பேட்டியில், ‘‘சிரியாவில் இருந்து கூட்டு அதிரடிப்படையை வாபஸ் பெறத் தொடங்கி விட்டோம்.

நேற்று முன்தினம் ஹசகேக் மாகாணத்தின் ரமேலியன் ராணுவ முகாமில் இருந்து அமெரிக்காவை சேர்ந்த சில ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளனர்’’ என்றார்.

610 total views