இலங்கையில் குண்டு வெடித்த ஹொட்டலில் காஜல் யார் தெரியுமா??

Report

கடந்த 21ம் திகதி கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மூன்றில் குண்டுகள் வெடித்தன. இதில் பெருமளவானவர்கள் உயிரிழந்திருந்தனர்.

உலகெங்குமிருந்து இந்த தாக்குதலிற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நடிகை காஜல் அகர்வாலும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

‘இலங்கையில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தொடர் குண்டு வெடிப்புகளால் என் மனம் நொறுங்கிவிட்டது.

உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் இழப்பின் ஆழத்தைக்கூட என்னால் யூகிக்க இயலவில்லை.

இறைவன் நம்முடன் இருப்பாராக. சில நாட்களுக்கு முன்னதாக நான் இலங்கையில் இருந்தேன். குண்டு வெடிப்பு நடந்த ஓட்டல்களில் ஒன்றில்தான் நான் தங்குவது வழக்கம்.

நாம் என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏன் எங்கும் இவ்வளவு வெறுப்பு? மிகுந்த வேதனையும் கோபமும் ஏற்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்’ என்று மிக நீண்ட பதிவொன்றைப் போட்டிருந்தார்.

காஜலின் இந்த கண்டனத்தின் பின்னர்தான் இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.

குண்டு வெடிப்பு நடந்த ஹொட்டல் ஒன்றின், சூதாட்ட கிளப் ரெகுலர் விசிட்டராம் காஜல். அங்கு சூதாட வருபவர்களுடன் பேசி, களித்து என்டரெயின்மென்ற் செய்வதற்கென்றே பெருந்தொகை பணத்தை பெற்று வந்திருக்கிறார்.

61371 total views