இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்

Report

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை 36 என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 13 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பிரஜைகள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டுப் பிரஜைகளில் அதிகளவில் இந்திய பிரஜைகளே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த வெளிநாட்டவர்களின் விபரங்கள்:

01. இந்தியா – 11 பேர்

02. பிரித்தானியா – 6 பேர்

03. டென்மார்க் – 3 பேர்

04. துருக்கி – 2 பேர்

05. பிரித்தானியா மற்றும் அமெரிக்க இரட்டை குடியுரிமை – 2 பேர்

06. ஆவுஸ்ரேலியா மற்றும் இலங்கை இரட்டை குடியுரிமை – 2 பேர்

07. சீனா – 2 பேர்

08. சவுதி அரேபியா – 2 பேர்

09. பங்களாதேஷ் – 01

10. ஜப்பான் – 01

11. நெதர்லாந்து – 01

12. போர்த்துக்கல் – 01

13. ஸ்பெயின் – 01

14. அமெரிக்கா – 01 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சில வெளிநாட்டவர்களின் சடலங்கள் அடையாளம் காண முடியாத நிலையில், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, 12 வெளிநாட்டவர்கள் தேசிய வைத்தியசாலை மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மேலும், 14 வெளிநாட்டவர்கள் குறித்து அவர்களது உறவினர்களால் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

33910 total views