குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா!!

Report

இலங்கையில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தலைவர் முன்வந்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.இதில் இலங்கையைச் சேர்ந்த ஜீவனா என்ற இளம்பெண்ணின் பெற்றோரும் உயிரிழந்தனர்.

ஜீவனாவுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தலைவர் அன்னஸ்டசியா பலஸ்சுக் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

“ஈஸ்டர் தினத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஜீவனா தனது பெற்றோரை இழந்துள்ளார்.அவருக்கு எல்லா உதவியும் செய்வதோடு குயின்ஸ்லாந்து துணையாக இருக்கும். இலங்கை சமுதாயத்துடன் சேர்ந்து இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்“ என்று பதிவிட்டுள்ளார்.

126401 total views