எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலிற்கு முன்னர் என்ன நடந்தது? புதிய தகவல்

Report

ஓமான் வளைகுடாவில் எண்ணெய்கப்பல்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு முன்னர் ஈரான் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மீது ஏவுகணைதாக்குதல்களை மேற்கொண்டது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

ஓமான்வளைகுடாவில் அமெரிக்காவின் ஆளில்லாவிமானங்கள் காணப்படுவதை அவதானித்த ஈரானின் பாதுகாப்பு படையினர் அமெரிக்க விமானம் மீது ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டனர் என அமெரிக்க அதிகாரியொருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த ஏவுகணை இலக்கை தாக்க தவறியது என தெரிவித்துள்ள அந்த அதிகாரி ஏவுகணை கடலில் விழுந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அமெரிக்காவின் எம்கியு-9 ரீப்பர் ரக விமானங்கள் ஈரானிய கடற்படை கலங்கள் எண்ணெய்க்கப்பல்களை நோக்கி செல்வதை அவதானித்தன எனவும் தெரிவித்துள்ள அதிகாரி எனினும் எண்ணெய்க்கப்பல் மீது தாக்குதல் இடம்பெறுவதை ஆளில்லா விமானங்கள் அவதானித்தனவா என்பது குறித்து தகவல் எதனையும் வெளியிட மறுத்துள்ளார்.

இதேவேளை சில நாட்களிற்கு முன்னர் ஹெளத்தி கிளர்ச்சிக்காரர்கள் ஈரானின் ஏவுகணைகளை பயன்படுத்தி செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தினார்கள் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

5352 total views