ஆசியாவில் இரண்டாவது பெரிய கட்சியாக மாறிய மஹிந்தவின் கட்சி?

Report

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு, தான் உட்பட, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் ஆதரவு அளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சஜித் – கோத்தபாயவை மோதலில் சிக்க வைக்க தீவிர முயற்சி! சதி செய்யும் கும்பல்

யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட செஞ்சோலை மாணவிகள் படுகொலை நினைவு தினம்

“உள்ளூராட்சி சபை தேர்தல்களில் பொதுஜன பெரமுன 5 மில்லியன் வாக்குகளையும், சுதந்திரக் கட்சி 1.4 மில்லியன் வாக்குகளையும் பெற்றன. ஐக்கிய தேசியக் கட்சி 3.4 மில்லியன் வாக்குகளை மட்டுமே பெற்றது.

எனவே, பொதுஜன பெரமுன அற்பமான கட்சி அல்ல. அது ஒரு வலுவான, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்சி, டிஜிட்டல் தளங்களில் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.

ஆசிய பிராந்தியத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில், பொதுஜன பெரமுன உள்ளது என்று பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

இந்த செல்வாக்கின் அளவைக் கொண்டு, இடதுசாரி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் உரிமை பொதுஜன பெரமுனவுக்கே உள்ளது.

கோத்தபாய ராஜபக்சவின் நியமனம் முறையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், மஹிந்த ராஜபக்சவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், 2 மணி நேர கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

அது அனைவருக்கும் சாதகமாக முடிந்தது என இருவரும் தெரிவித்தனர்.” என்றும் அவர் கூறினார்.

687 total views