தனது இருதயநோயை குணப்படுத்திய நபருக்கு நன்றி மழை பொழிந்த கிருபைராஜா சிவநாதன்!

Report

பல வருடங்களாக இருதய நோயினால் போராடி வந்த நபர் ஒருவர், தெய்வாதீனமாக உயிர் காப்பற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த 37 வயதான கிருபைராஜா சிவநாதன் பல வருடங்களாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக இவரது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்து மூச்சு திணறல் ஏற்பட தொடங்கியுள்ளது.

அரசாங்கத்தின் இலவச சத்திர சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மூன்று முறை சென்றும், அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இதையடுத்து இவரின் இதய வால்வு செயலற்று போனதுடன் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு வைத்தியசாலை மூலமாக கனடாவிலுள்ள செந்தில் குமாரனை தொடர்பு கொண்ட இவருக்கு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வாய்ப்பு கிடைத்தது.

இருதய சத்திர சிகிச்சை நிபுணர் காந்திஜியின் தலைமையிலான மருத்துவ குழுவினர் இவருக்கு மிகவும் கடினமான சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தனர்.

ஈழத்தின் வடக்கு மற்றும் கிழக்கில் இருதய மற்றும் கொடிய நோயினால் உயிருக்கு போராடும் ஏழை மக்கள் பலருக்கு பல இலட்சம் ரூபாய் செலவில் தனியார் வைத்தயசாலையில் சத்திர சிகிச்சைகளை ஒழுங்கு செய்து இதுவரை 55 உயிர்களை காத்து உள்ளார் செந்தில் குமரன்.

கனடா தேசத்தில் இசை நிகழ்வுகளை ஒழுங்கு செய்து, அதன் செலவுகள் முழுதும் தான் ஏற்று கொண்டு, சேரும் முழு நன்கொடைகளையும் அவர் இது போன்ற பணிகளுக்கு தனது நிவாரணம் அமைப்பின் ஊடாக நிறைவேற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1988 total views