சவுதியில் நிறுவப்பட்ட அமெரிக்க வான் பாதுகாப்பு கட்டமைப்பின் பலவீனத்தை அம்பலப்படுத்திய ஹவுத்திகள்!

Report

சவுதி எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல்கள் பெரும்பாலும் பொதுமக்களுக்கு ஒரு மர்மமாகவே இருக்கின்றன.

2015 முதல் சவுதி கூட்டணியுடன் போரில் ஈடுபட்டுள்ள யேமனின் ஹவுத்தி போராளிகள், சவுதி எண்ணெய் ஆலைகள் இரண்டின் மீதான ஒருங்கிணைந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் ஹவுத்திகள் மட்டுமே நீண்ட தூர, துல்லியமாக வழிநடத்தும் தாக்குதல்களுக்கான திறனைக் கொண்டுள்ளனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆளில்லா ட்ரோன்களை பாவித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹவுதி போராளிகளின் வல்லமையின் அடிப்படையில் சிறிய, வழிகாட்டப்பட்ட ஆயுதங்களை சுடும் வல்லமையை கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் சவுதி அரேபியா- யேமன் எல்லையிலிருந்து 800 மைல் தொலைவில் உள்ளன. இதனால் ஹவுதி போராளிகள் மாத்திரம் இதில் சம்பந்தப்பட்டார்கள் என்பதை நம்ப சிரமமாக உள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல்படை கடந்த காலங்களில் ஹவுத்திகளுக்கு ட்ரோன்கள் மற்றும் பொலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான பாகங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கியுள்ளது.

ஆனால் ஒரு விஷயம் தெளிவாக உள்ளது. இந்த தாக்குதல் சவுதி அரேபியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் தனது வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பை நிறுவ சவுதி பெருமளவு பணத்தை கொட்டியது. அமெரிக்க தயாரிப்பு patriots ஏவுகணை கட்டமைப்பை நிறுவியுள்ளது.

ஏவுகணைகள் மற்றும் சவுதிக்குள் வரும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கண்காணிக்கும் ரடார்களை கொண்ட ஆறு பட்டாலியன்களை நிறுவ சவுதி பில்லியன் கணக்கான டொலர்களை செலவிட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் patriots சமீபத்திய தாக்குதலை நிறுத்தவில்லை.

சவூதி அரேபியா நிறுவிய patriots கட்டமைப்பு தோல்வியுற்றது இதுவே முதல் முறை அல்ல. மார்ச் 25, 2018 அன்று ரியாத்தை குறிவைத்து சரமாரியாக ரொக்கெட்டுகளை கவுத்தி போராளிகள் ஏவுயபோது, patriots கட்டமைப்பு அவற்றை அழிக்க முயன்றது. இதில் குறைந்தது ஐந்து patriots இலக்குகளை தவறவிட்டன. அல்லது தோல்வியுற்றன.

அன்றிரவு சவுதி அரேபியா மீது ஹவுதி போராளிகள் குறைந்தது ஏழு ரொக்கெட்டுகளை வீசியது. ரொக்கெட்டுகளை நடுவானில் அழிக்கும் முயற்சியில் சவுதி இராணுவம் patriots மேம்பட்ட திறன் -2 ஏவுகணைகளை ஏவியது.

ஏழு ரொக்கட்டுக்களும் அழிக்கப்பட்டதாக சவுதி கூறினாலும், அதில் 5 அழிக்கப்படவில்லையென சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் உலோகத் துண்டுகளால் தாக்கி ஒருவர் இறந்தார். patriots இடைமறிப்பிலிருந்தா அல்லது தரையில் வீழ்ந்து வெடித்த கவுத்தி ரொக்கெட்டுகளிலிருந்தா அவர் உயிரிழந்தார் என்பது தெரியவில்லை.

ஆனால், சவுதி வான் கட்டமைப்பின் வல்லமையை சிறிய கவுத்தி போராளிகள் இரண்டு முறை கேள்விக்கிடமாக்கியுள்ளனர்.

1089 total views