இஸ்ரேல் – அமெரிக்க தலைவர்கள் விசேட பேச்சு

Report

ஈரானின் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்தில், அணு ஆயுதம் தயாரிக்கப்பயன்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியம் உற்பத்தியை ஈரான் 10 மடங்காக அதிகரித்தது. அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது எனவும், எதிரிகளின் சதி முறியடிக்கப்படும் எனவும் ஈரான் தெரிவித்திருந்தது.

இதனையடுத்தே இவர்களது சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

டிரம்ப் ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, கோலன் ஹைட்ஸ் பகுதியை இஸ்ரேலின் பிரதேசமாக இணைத்ததன் மூலம் இருவரிடையேயும் வலுவான உறவு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

295 total views