யாழில் அடையாளம் காணப்பட்ட 2வது கொரோனா வைரஸ் தொற்றாளர்!

Report

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு இன்று மாலை அறிவித்திருந்தது.

இந்நிலையில், இவ்வாறு கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மருதானை, யாழ்ப்பாணம் மற்றும் குருணாகல் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட நபர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஆவார்.

மானிப்பாய் கிறிஸ்தவ தேவாலய போதகர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த 23 ஆம் திகதி சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை இலங்கையில் 146 பேர் கொவிட் -19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 21 பேர் குணமடைந்துள்ளார்கள்.

அத்தோடு, இருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1485 total views