கொரோனாவுக்கு சிகிச்சையாக டிரம்ப் பரிந்துரைத்த மருந்தால் உயிரிழப்பு அதிகரிப்பு! பிரான்ஸ் அதிரடி உத்தரவு

Report

கொரோனாவுக்கு சிகிச்சையாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வீரன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மருந்தை பயன்படுத்துவதால் இறப்பு விகிதங்களை உயர்த்துவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பிரான்ஸ் சுகாதார அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைத்தார், சமீபத்தில் வைரஸைத் தடுக்க அதை எடுத்துக்கொள்வதாகக் கூறினார்.

எனினும், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் என எந்த ஆராய்ச்சியிலும் உறுதிப்படுத்தவில்லை, அதன் காரணமாக மக்கள் அதை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு விஞ்ஞானிகள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வீரன், 48 மணி நேரத்திற்குள் மருந்துகளின் பரிந்துரை வழிகாட்டுதல்களை மறு மதிப்பீடு செய்ய அரசாங்கத்தின் சுகாதார ஆலோசனைக் குழுவிடம் கேட்டதாகக் கூறினார்.

தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆராய்ச்சியின் முடிவுகள் அவை ஆபத்தானவை என்று அவர் விவரித்தார்.

730 total views