மகளை கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயற்சி பெண்ணின் பின்னணி வெளியானது !

Report

வவுனியா – நெடுங்கேணியைச் சேர்ந்த இளம் வயது தாய், பிரிட்டன் மிட்சம் பகுதியில் தான் பெற்ற மகளையே கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்

இந்நிலையில், தற்கொலைக்கு முயன்ற தாயாரான சுதா என்பவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் இந்த சம்பவத்தில் சயனிகா (வயது – 04 ) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

மனைவியே இவ்வாறு தனது பிள்ளையைக் கத்தியால் குத்தியுள்ளார் என்றும் மன அழுத்தமே இதற்கு காரணம் என்றும் கணவன் கருணாநிதி சிவானந்தம் (சுகந்தன்) தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இந்த கொலை தொடர்பில் வேறு எவரும் தொடர்புபடவில்லை என ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் தெரித்துள்ளனர்.

இதேவேளை குறித்த தாய் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும் அடிக்கடி உறவினர்களிடம் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் தனது உயிருக்கு ஏதாவது நடந்தால் தன் பெண் பிள்ளையை யார் கவனிப்பார்களோ என கூறுவதோடு, ஒருவேளை தான் இறந்தாலும் தன் மகளையும் தன்னுடனேயே கூட்டிச்செல்வேன் என உறவினர்களிடம் கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

18259 total views