பயணிகளைச் சிறை வைத்த சுவிட்சர்லாந் ஆல்ப்ஸ் மலை

Report
6Shares

சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் அமைந்திருக்கிறது ஜெர்மாட் உல்லாச விடுதி. குளிர்காலத்தில் பனியை ரசிக்கவும் பனிச் சறுக்கு விளையாடுவதற்காகவும் உலகம் முழுவதிலுமிருந்து இங்கே பயணிகள் வருகிறார்கள்.

இந்த ஆண்டு எதிர்பாராத விதத்தில் மிகக் கடுமையான பனிப் பொழிவு. பல அடி உயரத்துக்கு பனி பெய்ததால் சாலைகள் மூடப்பட்டுவிட்டன.

ரயிலையும் இயக்க முடியாத சூழல். கீழிருந்து மேலே வருவதற்கோ, மேலிருந்து கீழே செல்வதற்கோ வழி இல்லை. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். பலருக்கு இந்த அதீத பனியும் குளிரும் ஒத்துக்கொள்ளவில்லை. ஜெர்மாட் விடுதிகளில் மட்டும் 13 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கிறார்கள். 5,500 மக்கள் வசிக்கிறார்கள்.

“வெளியில் செல்ல முடியாது, விளையாட முடியாது. ஆனால் அறைகளுக்குள் பத்திரமாக இருக்க முடியும். பனி குறைந்தவுடன் கிளம்ப வேண்டியதுதான்” என்று ஒரு பக்கம் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். “இந்த மோசமான பருவ நிலையை ரசிக்க முடியவில்லை.

அதனால் ஹெலிகாப்டர் மூலம் கீழே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று மற்றொரு பக்கம் கிளம்புகிறார்கள். ‘

527 total views