சுவிஸ்லாந்தில் தமிழ் இளைஞன் விபத்தில் பலி!

Report

சுவிட்ஸர்லாந்து Waldstatt a Töfffahrer பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதில் திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிட்ஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற 25 வயதான இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

498 total views