விமானத்தை சேதனையிட்ட சூரிச் சுங்க அதிகாரிகள்... எக்ஸ் ரே கருவியில் சிக்கிய 79 மர்ம பொட்டலங்கள்

Report

தென்னாப்பிரிக்காவிலிருந்து வியன்னா செல்லும் விமானம் ஒன்றில் சந்தேகத்துக்குரிய வகையில் 79 பொட்டலங்கள் இருப்பது எக்ஸ் ரே கருவி மூலம் தெரியவந்தது.

விமானத்திலிருந்த பொருட்களை சூரிச் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது எக்ஸ் ரே இயந்திரம் சந்தேகத்துக்குரிய ஒரு பொருள் ஒரு பெட்டியில் இருப்பதைக் காண்பித்தது.

அந்த பெட்டியைப் பிரித்துப் பார்த்த அதிகாரிகள், அதற்குள் 79 பொட்டலங்களில் கஞ்சா இருப்பதைக் கண்டுள்ளனர்.

அதில் 83 கிலோகிராம் கஞ்சா இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா சூரிச் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2088 total views