ஜேர்மனியில் கிருமிநாசினி பற்றாக்குறை உதவ முன்வந்துள்ள சுவிட்சர்லாந்து!

Report

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல நாடுகளில் கிருமிநாசினி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தனது அண்டை நாடான ஜேர்மனிக்கு உதவ சுவிட்சர்லாந்து முன்வந்துள்ளது.

சுவிஸ் நிறுவனமான Clariant, ஜேர்மனியிலிருக்கும் தனது ஆலைகளில் மாதந்தோறும் இரண்டு மில்லியன் லிற்றர்கள் கிருமிநாசினிகளை உற்பத்திசெய்ய துவங்கியுள்ளது.

ஜேர்மன் நிறுவனமான CropEnergies நிறுவனத்துடன் இணைந்து சுவிஸ் நிறுவனமான Clariant தன்னிடமிருக்கும் எத்தனால் முதலான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி கிருமிநாசினிகளை உற்பத்தி செய்ய துவங்கியுள்ளது.

இதனால், பவேரியாவின் ஒரு மாதத்திற்கான கிருமிநாசினி தேவையில் மூன்றில் இரண்டு பங்கு சந்திக்கப்படும்.

இதற்கிடையில், ஐரோப்பாவின் பல நாடுகளில் கிருமிநாசினி பற்றாக்குறை காரணமாக, மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்கள் கிருமிநாசினி தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

925 total views